டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருவண்ணாமலை/வேலூர்: பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் தொமுச மாநில துணைத் தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் த.ஆறுமுகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். தொமுச செயலாளர் சவுந்திரராஜன் தொடங்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில், தொமுச மாவட்டப் பொருளாளர் க.முனியப்பன் நன்றி கூறினார்.

வேலூரில் வாயிற் கூட்டம்

முடிவில், மாவட்ட துணை செய லாளர் கர்ணன் நன்றி தெரிவித்தார். இதில், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினர்களும் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in