

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 331 ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர்
பின்னர், போலீஸார் அறிவுறுத்தலின்பேரில், ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலைய கூடாரத்துக்குள் சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.