ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழியேற்பு

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி  பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழியேற்பு
Updated on
1 min read

கடலூரில் அரசு ஊழியர்கள் நேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் பிறந்த தினமான பிப்ரவரி24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட அரசால் அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திக்கேயன் தலைமையில் அனைத்து அலுவலர்க ளும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

பெண்குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி மொழி ஏற்றுக் கொள் ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் பொது (பொறுப்பு) பரிமளம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவ ளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in