சிவகங்கை மாவட்டத்தில் ஜெ. பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கிய அதிமுகவினர்

சிவகங்கை அருகே சுந்தரநடப்பு மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய   மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன்.
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தேவகோட்டையில் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவரது தலைமையில் காரைக்குடி ஆர்.எச். மாற்றுத்திறனாளி பள்ளி, தாயுமானவர் முதியோர் இல்லம், பொன்மலர் முதியோர் இல்லம், கோட்டூர் மாற்றுத்திறனாளி இல்லம் மற்றும் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப் பட்டது.

சிவகங்கை எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன் மாலை அணிவித்தார். எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் கருணாகரன் தலைமையில் முத்துப்பட்டி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, சிவகங்கை பார்வையற்றோர் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மானாமதுரை ஹோலிகிராஸ் முதியோர் இல்லம், சுந்தரநடப்பு புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் மற்றும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயிலில் நாகராஜன் எம்எல்ஏ தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in