

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் காஞ்சி மண்டல பேரவைக் கூட்டம் திருவள்ளூரில் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றது.
இதில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், திருவள்ளூர், காஞ்சி, செங்கை, தென் சென்னை மாவட்டச் செயலாளர்களான ராஜேந்திரன், முத்துக்குமார், பகத்சிங்தாஸ், பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சம்மேளன மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், மாநில துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டபிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க காஞ்சி மண்டல தலைவராக சுந்தரராசன், பொதுச் செயலராக சீனிவாசன் பொருளராக கமலக்கண்ணன் உட்பட 25 பேர் கொண்டநிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
இதில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பேருந்துகளை கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் போதியஅளவில் இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.