கிருஷ்ணகிரியில் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் 26-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வரும் 26-ம் தேதி காலை 10.30 மணியளவில் வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in