புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாணவிக்கு இலவச  இணையதள டேட்டா கார்டை வழங்கிய எம்எல்ஏ  பன்னீர்செல்வம் .
புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாணவிக்கு இலவச இணையதள டேட்டா கார்டை வழங்கிய எம்எல்ஏ பன்னீர்செல்வம் .

785 மாணவர்களுக்கு இலவச இணையதள டேட்டா கார்டுகள்

Published on

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாண வர்கள் 785 பேருக்கு இலவச இணையதள டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு இலவச இணையதள டேட்டா கார்டுகளை வழங்கிப் பேசும் போது, “தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச இணையதள டேட்டா கார்டு களை வழங்கப்பட்டு வருகிறது. இந்த டேட்டாவை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் செல் போனில் தான் சீரழிந்து வருகிறது. பிள்ளைகள் செல்போனில் படிக்கின்றனர் என உங்களை உங்களது பெற்றோர் முழுமையாக நம்பி இருக்கின்றனர்.

அவர்களது கனவை நனவாக்குங்கள். இலவச இணையதள டேட்டாவை தவறான செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது” என கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பிச்சுமணி, வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி, அரசு தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், பேராசிரியர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in