Published : 23 Feb 2021 03:16 am

Updated : 23 Feb 2021 03:16 am

 

Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

சிறுமிக்கு அமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிய பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த 12-ம் தேதி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். நடுசுரங்குடியைச் சேர்ந்த பாக்யராஜ், செல்வி தம்பதியும் உயிரிழந்தனர். இவர்களது மகள் நந்தினி (12). 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமி நந்தினியின் வீட்டுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் சிறுமிக்குத் தேவையான புதிய ஆடைகள் மற்றும் பொருட்களை வழங்கினார். மேலும், அந்தச் சிறுமி பிளஸ் 2 வரை படிப்பதற்கு உதவியாக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை சிறுமியிடம் அமைச்சர் வழங்கினார். மேலும் சிறுமியின் மேற்படிப்பு மற்றும் திருமணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக உறுதி அளித்தார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x