Published : 22 Feb 2021 03:17 am

Updated : 22 Feb 2021 03:17 am

 

Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

நிலுவைக் கோரிக்கைகள் நிறைவேற்ற சிக்கன நாணய சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு

மதுரை

தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி அமைக்கப்பட்ட குழுவிடம் மாநில கூட்டமைப்பு அளித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூவை மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, 2017 ஜன., 1 முதல் நிதி பயன் அளித்தல், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மலைவாழ்படி, குளிர்காலப்படி ஆகியவை அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும்,


தேர்வு நிலை / சிறப்பு நிலை இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குதல், அரசாணை, செயல்முறை ஆணைப்படி ஊதியம் பெறாத பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் , பணி நிலைத் திறன் உறுப்பினர் கடன் அளவைக்கொண்டு நிர்ணயம் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்தும் நிலுவையில் உள்ளதா கவும், விரைவாக அறிவித்திடுமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் ,தற்காலிக ஊழியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x