திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் இருக்கை குறைபாடு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும்    இ-சேவை மையத்தில் இருக்கை குறைபாடு
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் மற்றும் இ-சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள், அங்கு இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் இ-சேவை மையம் மற்றும்ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் அமர ஏதுவாக இருக்கைகள் அமைக்கப் படவில்லை. இதனால் கர்ப்பிணிகள், மாணவ, மாணவிகள் மற்றும் மூத்த குடிமக்கள் என பல்வேறு தரப்பினரும் தரையில் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது ‘‘ஆதார் மற்றும்இ-சேவை மையங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால், மணிக்கணக்கில் தரையில் அமர்ந்து, தங்களது வேலையை முடித்து செல்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பிரிவு அதிகாரிகளும் பணியாற்றும் இடத்தில் பொதுமக்கள் கூடும் சேவை மையங்களில், போதிய இருக்கை வசதி இல்லாதது, வேதனையளிக்கிறது. ஆகவே,உடனடியாக இரு மையங்களிலும் போதிய இருக்கை வசதிகளை செய்துதர வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in