

ஊத்துக்குளி அருகே பல்லக்கவுண்டம் பாளையம் பகுதியில் மண் பானை வீட்டுமுறை சமையல் என்ற பெயரில், உணவகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகஅப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், மதுவிலக்கு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, உணவகத்தில் முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "மண் பானை சமையல்என்ற பெயரில் வீடு, தோப்பு, பண்ணை வீடு போன்று செயல்படும் உணவகங்களில் சாப்பிட வருபவர்களுக்காக மது பாட்டில்கள் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.