Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் காஞ்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ.63 லட்சம் கல்வி நிதி

காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரிடம் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ச.ஆறுமுகத்திடம் வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.63 லட்சம் வழங்கினார். உடன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ப.லோகநாதன், துணைத் தலைவர் பி.டி.பானுபிரசாத், நிர்வாகக் குழு உறுப்பினர் வே.ஆனூர் பக்தவச்சலம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர்.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.63 லட்சம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 2019-2020-ம் ஆண்டில் ஈட்டிய லாபத் தொகையிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.37லட்சத்து 95 ஆயிரத்து 878 மற்றும் 'கூட்டுறவு கல்வி நிதி ரூ.25 லட்சத்து 30 ஆயிரத்து 585 ஆகமொத்தம் ரூ. 63லட்சத்து 26 ஆயிரத்து 463-க்கான காசோலையை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ப.லோகநாதன் ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ச. ஆறுமுகத்திடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வங்கியின் துணைத் தலைவர் பி.டி. பானுபிரசாத், நிர்வாகக் குழு உறுப்பினர் வே. ஆனூர் பக்தவச்சலம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ஜெயபால் மற்றும் வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் ஜெகன்சிங் ராஜன், வங்கியின் பொதுமேலாளர் ஜெ. விஜயகுமாரி மற்றும் வங்கியின் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி கூறியதாவது: கூட்டுறவு வங்கியின் லாபத் தொகையில் இருந்து 5 சதவீதம் நிதியை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வழங்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு 63 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி, நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்படும். கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்துக்கு வழங்கப்படும். மேலும் கூட்டுறவு சங்கங்களின் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x