பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலை கிரசன்ட் பள்ளி தெருவில் வசிப்பவர் ஜெயராமன் மகன் சண்முகசுந்தரம்(33). காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி ரேவதி மற்றும் 5 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் வீட்டின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர், ரேவதி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in