போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்.27-ம் தேதி ஏலம்

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்.27-ம் தேதி ஏலம்
Updated on
1 min read

பெரம்பலூரில் போலீஸாரால் பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் பிப்.27-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியா தெரிவித்துள்ளது:

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை யாக்கப்பட்ட 33 இருசக்கர வாகனங் கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் பிப்.27 அன்று காலை 10 மணி முதல் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளன.

பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.1,000 வைப்பு தொகை செலுத்தி தங்களது பெயர், முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாகனங் களை பிப்.25 அன்று முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்.

கூடுதல், விவரங்களுக்கு மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 9498104778 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in