மயில்களை சுட்டு வேட்டையாடிய இருவர் கைது

மயில்களை சுட்டு வேட்டையாடிய இருவர் கைது

Published on

திருவாரூர் மாவட்டம் சோழபாண்டியில் நேற்று அதிகாலை தலையாமங்கலம் போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த திருமக்கோட்டை திரு மேனிஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த இளங்குமரன்(35), முரு கேசன்(19) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் 3 மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்ததால் இருவரும் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in