பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் பிப்.22-ல் திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் பிப்.22-ல் திமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் வரும் 22-ம் தேதி தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்எரிவாயு விலையை தாறுமாறாக உயா்த்திய மத்திய பாஜக அரசையும், அதற்குதுணைபோவதாக அதிமுக அரசையும்கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுக சார்பில்22.02.2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆா்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி தூத்துக்குடி வடக்குமாவட்ட திமுக சார்பில் வரும் 22-ம் தேதிகாலை 10 மணி அளவில் தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதேபோல் தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று பேசுகிறார். ஆர்ப்பாட்டங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இரு மாவட்ட பொறுப்பாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in