

கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையம் பகுதியில் வடிகால் கட்டும் பணி காரணமாக குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால், சாலைபுதூரில் 6 மாதங்களாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குடிநீர் சுகாதாரமானதாக இல்லை எனக் கூறி, குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலிக் குடங்களுடன் சாலைபுதூரில் மதுரை பழைய புறவழிச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மு.பிரபாகரன் மற்றும் நகராட்சி உதவிப் பொறியாளர் மஞ்சுநாத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.