

தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப். 19) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ம.பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.02.2021 காலை 10.30 மணியளவில் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
பல்வேறு முன்னணி தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கவுள்ள இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை இம்முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.