திருப்பத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழா

திருப்பத்தூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
திருப்பத்தூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் வெங் களாபுரம் கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச் சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு, கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகத்தை குத்துவிளக் கேற்றி திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, 148 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோ பர்கபீல் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமு, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிட பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. ரூ.12.12 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலக கட்டிடப் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டிடப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி., டாக்டர்.விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in