குறைந்த மின்னழுத்தம்: தீர்வு காண கோரிக்கை

குறைந்த மின்னழுத்தம்: தீர்வு காண கோரிக்கை
Updated on
1 min read

கணக்கம்பாளையம் மீனாட்சி நகர் குடியிருப்பு பகுதி மக்கள் கூறும்போது, "திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே மீனாட்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக, பெரும்பாலான பகுதிகளிலுள்ள வீடுகள், கடைகளில் பெரிய மின் விளக்குகள் எரிவதிலும், மிக்ஸி, கிரைண்டர், ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்படுவதுடன், அடிக்கடி மின்சாதனப் பொருட்கள் சேதமடைகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றால் சீரான மின்சாரம் கிடைக்காமல் குறைந்த மின்னழுத்த கோளாறு நீடிப்பதாக கருதுகிறோம்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த மின்னழுத்த கோளாறை சரி செய்ய உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in