2-வது முறையாக தேர்வு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு கடலூர், விழுப்புரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து, இத்தேர்விற்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, திருவள்ளூவர் பல்கலைக்கழகம் சார்பில், தற்போது கரோனா காலத்தில் நடைபெறாத செமஸ்டர் தேர்வு மீண்டும் நடை பெறும். இதற்கான தேர்வுக் கட்டணத்தை வசூலிக்கவும் அந்தந்தகல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப் புக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபோல சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, விழுப்புரம் அரசுக்கல்லூரி யில் நேற்று இரண்டாவது முறையாக, வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in