தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார். 				     படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

வருவாய்த்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.19,82,266 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.04 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வேளாண்மை பயிர்கள், 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் எனமொத்தம் 1.21 லட்சம் ஹெக்டேர்பரப்பில் பயிர்கள் மழை,வெள்ளத்தால் சேதமடைந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த பயிர்கள் அனைத்துக்கும் நிவாரணம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. படிப்படியாக நிவாரண தொகை ஒதுக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதல்கட்டமாக 12,984 விவசாயிகளுக்கு ரூ.16,48,95,993 நிவாரணம் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக கடந்தசனிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்டதனித்துணை ஆட்சியர் தமிழரசி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜீவரேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in