கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக பரவும் வதந்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் புகார்

கேங்மேன் பணி நியமனம்  தொடர்பாக பரவும் வதந்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் புகார்
Updated on
1 min read

தமிழக காவல் துறை தலைவருக்கு, மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் அ.சரவணன் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ‘மின்சார வாரிய கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக தொமுச தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் ‘வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பணி நியமனம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இவ்விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in