

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுப்பதுடன், அங்கு பணிபுரியும் பணியா ளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.