

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை:
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணிமேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கானதகுதியான விண்ணப்பதாரர் களை தேர்வு செய்ய, தூத்துக்குடிகாமராஜ் கல்லூரி மற்றும் ஏ.பி.சிவீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை (பிப்.15) எழுத்துத்தேர்வு நடைபெற இருந்தது.
இதுபோல் வரும் 16-ம் தேதி நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை எழுத்துத் தேர்வு நடைபெறஇருந்தது. நிர்வாக காரணங்களால் மறு உத்தரவு வரும் வரைஇத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.