வனத்தில் வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி சூட்டில் தொழிலாளி உயிரிழப்பு

வனத்தில் வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி சூட்டில் தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டமஞ்சு மலைக்கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பசப்பா (40). இவரது நண்பர், சிக்கமஞ்சு கிராமத்தைச்சேர்ந்த நாகராஜ் (27). நேற்று முன்தினம் இரவு 2 பேரும், சிக்கமஞ்சு வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றனர். இருவரும் வெவ்வேறு திசையில் சென்ற போது எதிரே சத்தம் கேட்டுள்ளது. அப்போது நாகராஜ் காட்டுப்பன்றி என நினைத்து தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இதில் எதிர்பாராதவிதமாக பசப்பா உடலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பசப்பா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கிராமத்துக்கு திரும்பிச் சென்ற நாகராஜ் சம்பவம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி என்பதால், இரவில் சடலத்தை மீட்க முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை வனத்துறையினர் மற்றும் போலீஸார் காட்டுக்குள் சென்று பசப்பாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, தேன்கனிக்கோட்டைஅரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நாகராஜை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in