

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போல, தேசிய வங்கிகளிலும் விவசாயம் சார்ந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, தஞ்சாவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தெற்கு வட்டாரத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.