ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுகுறித்து ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர் பணியிடங்கள் 11 மாதங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். பெயின்டர், வயர்மேன் பயிற்றுநர் பணியிடங்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், எம்பிடி சாலை, ராணிப்பேட்டை என்ற முகவரியை அணுகலாம். மேலும், 04172-271567 அல்லது 94990-55681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in