என்.சி.சி. மாணவர்களுக்கு சான்றிதழ் எழுத்துத் தேர்வு

என்.சி.சி. மாணவர்களுக்கு சான்றிதழ் எழுத்துத் தேர்வு
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் ‘ஏ’ எழுத்துத் தேர்வு உதகையில் நடந்தது.

நீலகிரி மாவட்ட 31-வது தமிழ் நாடு அணி தேசிய மாணவர் படையின் கட்டுப்பாட்டில் உள்ள 12-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவிகள் 450-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்ட தமிழ்நாடு தனி அணி என்.சி.சி. அணியின் கமாண்டர் கர்னல் தேப் தேர்வை தொடங்கி வைத்தார். இதில் 350 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு துப்பாக்கியை கையாளுதல் தேர்வு, ராணுவ அணிவகுப்பு, வரைபடம் பார்த்தல், உடல் தகுதித் தேர்வு என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.

200 மதிப்பெண்களுக்குமேல் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். துப்பாக்கியை கையாளுதல் தேர்வை ராணுவ அதிகாரிகள் சுபேதார் சந்தோஷ், ராஜேஷ்குமார், அலுவலர்கள் சுப்ரமணியன், காமராஜ், யூபர்ட், ஜாய், சீனிவாசன், ஜிஜோ, சந்திரசேகர் மேற்பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in