கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பயனற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனையில் சிடி ஸ்கேன் பிரிவு பகுதியில் பயனற்றுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக குழாய். படம்: எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனையில் சிடி ஸ்கேன் பிரிவு பகுதியில் பயனற்றுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக குழாய். படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் குழாய்கள் பராமரிப்பு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், நோயாளிகளும், பொதுமக்களும் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 29 இடங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் குழாய்கள் உடைந்து, பயன்பாடு இல்லாமல் உள்ளன.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘நோயாளிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 29 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க குழாய் அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது குழாய்கள் பல இடங்களில் உடைந்து காட்சியளிக்கின்றன. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வெளியே உள்ள கடைகளில் பாட்டில் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக குழாய்களைச் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in