முஷ்ணத்தில் இளைஞரை கொன்ற தாய்,சகோதரர் கைது

முஷ்ணத்தில் இளைஞரை கொன்ற தாய்,சகோதரர் கைது
Updated on
1 min read

முஷ்ணத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை கொன்றதாய், சகோதரர் கைது செய்யப் பட்டனர்.

முஷ்ணம் வானக்கார தெருவில் வசித்து வருபவர் நடராஜன் மனைவி குப்பாயி (62). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும்இருந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு குப்பாயி மகள் உயிரிழந்தார். இவரின் முதல் மகன் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பாஸ்கரன் (39) வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்குவந்துள்ளார். திருமணம் ஆக வில்லை என்ற ஏக்கத்தில் குடித்துவிட்டு தகராறு செய்வதை பாஸ்கரன் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு சென்ற பாஸ்கரன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தாயார் குப்பாயி மற்றும் தம்பிபிரபாகரன் ஆகியோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தொடர்ந்து தகராறு செய்து வந்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த குப்பாயி மற்றும் பிரபாகரன் ஆகியோர் கழி மற்றும் கம்பியால் பாஸ்கரனை தாங்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாஸ்கரன் உயிரிழந்தார். இதுதொடர்பாக முஷ்ணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குப்பாயி,பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.

திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் குடித்து விட்டு தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in