தூத்துக்குடியில் 5 மாவட்ட சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப் பணியாளர்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப் பணியாளர்கள்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன் 5 மாவட்ட சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளான 41 மாதபணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தர ஊதியத்தை ரூ.1900 ஆக உயர்த்தவேண்டும். பணியின் போது இறந்துபோன சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர்கள் ஏ.பழனிச்சாமி (தூத்துக்குடி), எம்.முத்துச்சாமி (விருதுநகர்), எம்.மாரிப்பாண்டி (தென்காசி) தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் ஏ.செம்புலிங்கம் (தூத்துக்குடி), பி.பிரேம்குமார் (விருதுநகர்), வி.சங்கரபாண்டி (தென்காசி) முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ஜெ.ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில தலைவர் மா.சண்முகராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in