

இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடை யாள அட்டையை கைப்பேசி மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக பெயர் சேர்த்த 18 வயது நிரம்பியஇளம் வாக்காளர்கள் மட்டும் வாக்காளர் அடை யாள அட்டையை கைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்யலாம். இதனை எங்கு வேண்டுமானாலும் அச்சிட் டுக்கொள்ளலாம். இதனை அடையாள அட்டையாகவும் பயன்படுத்த முடியும். இதனை https://nvsp.in, அல்லது https:// voterportal.eci.gov.i ஆகிய இணைய முகவரி யினை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் பதவிறக்கம் செய்யலாம். மேலும் கைப்பேசியில், " Voter HelplineMobile app (Android/iOS)" மூலமும் இ.வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.