

தேனி அருகே கோட்டூரைச் சேர்ந்த சூரியமூர்த்தி மகன் ராஜேஷ்கண்ணன் (45). இவர் உசிலம்பட்டியில் அரசு பஸ் நடத்துநராக இருந்தார். இந்நிலையில் தோட்டத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். வீரபாண்டி போலீஸார் விசாரணையில் ராஜேஷ்கண்ணனின் மனைவி மணிமேகலையும், அவரது உறவினர் மலைச்சாமியும் இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்தனர்.