தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

தேனி வாக்கு எண்ணும்  மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாக்குகளை எண்ணும் மையமாக தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு இயந்திரம் வைப்பதற்கான அறைகள், ஓட்டு எண்ணப்படும் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ. சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், பெரியகுளம் உதவி ஆட்சியர் டி.சிநேகா உட்பட பலர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in