தை அமாவாசையையொட்டி நாளை திருவையாறில் புனித நீராட தடை

தை அமாவாசையையொட்டி நாளை திருவையாறில் புனித நீராட தடை

Published on

ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று வெளியூர் மற்றும் வெளி மாவட்டங் களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்பமண்டப படித்துறையில் புனித நீராடி, தர்ப் பணம் செய்து, திதி கொடுத்து, ஐயாறப்பரை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரண மாகவும் பொதுமக்களின் நலன் கருதியும் தை அமாவா சையை யொட்டி நாளை(பிப்.11) திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் புனித நீராடவும், தர்ப்பணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்ற விளம்பரத் தட்டியை வைத்துள்ளனர்.

மேலும், வெளியூர் பொதுமக் கள் யாரும் திருவையாறுக்கு நீராடவோ, தர்ப்பணம் செய்யவோ வரவேண்டாம் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in