Regional02
இருசக்கர வாகனம் மீது வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வல்லகுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் விவேக் லெவிங்ஸ்டன் (31). இவருக்கு மனைவி, 11 மாத பெண் குழந்தை உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் நகர் பகுதியில் தங்கி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி நேற்று இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தார். அம்மாபாளையம் சோதனைச்சாவடி அருகேபின்னால் அதிவேகமாக வந்த வேன் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
