விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் கொமதேக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் கொமதேக பொதுச்செயலாளர்  வலியுறுத்தல்
Updated on
1 min read

நாமக்கல்லில் கொமதேக நகர பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததை வரவேற்கிறோம். விவசாயிகள் விளை நிலங்களில் உயர்ந்த மின் கோபுரம் அமைக்கும் போது அரசின் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். அதேபோல் புதுப்பிப்பதற்காக பணம் கட்டியவர்கள் எண்ணிக்கை கணக்கில் எடுக்க வில்லை.

அதையும் கணக்கிட்டு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சசிகலா அரசியல் களத்தில் இறங்கினால் மிகப்பெரிய சலசலப்புகள் அதிமுகவில் நடக்கும் என்பது எதிர்பார்த்தது தான், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in