பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Published on

சத்தியமங்கலம் அருகேபவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர்கள் புவனேஷ்குமார்(17), தர் (21), அவிநாசி வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலமணிகண்டன் (23). இவர்கள் மூவரும் புன்செய் புளியம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். மூவரும் சத்தியமங்கலம் அருகே கரும்பாறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்றனர். இதில், பாலமணிகண்டன் உள்ளிட்ட மூவரும் ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாததால் தத்தளித்தனர். அப்பகுதி மீனவர்கள் தரை காப்பாற்றி கரை சேர்த்தனர். மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினர். சத்தியமங்கலம் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடு தலுக்குப் பின்னர், பாலமணிகண்டன் மற்றும் புவனேஷ் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in