அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ், ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் பணிபுரியும் மகளிருக்கு, அவர்கள் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்கமானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக விண்ணப் பங்கள் பெறப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2020-21-ம் ஆண்டுக்கு 2,633 வாகனங்கள் என ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

அதில் இதுவரை 543 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2090 எண்ணிக்கையில் பொது பிரிவில் 1,466, எஸ்சி., எஸ்டி பிரிவில் 519 மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 105 எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. வாகனத் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வாகனம் வாங்கியமைக்கான கருத்துரு சமர்ப்பித்தவுடன் மானியத் தொகை தாமதமின்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும்.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் தகுதியுடைய மகளிர் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப் பங்களை பெற்று, அவர்கள் சார்ந்த அலுவலகங்களில் வழங்கி பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in