பிப்.9-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.9-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், கரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசின் உத்தரவுக்கு இணங்க, இக்கூட்டத்தை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்டங்களில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் பிப்.9 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இதைவிவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in