மேல்நல்லாத்தூர் ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை

மேல்நல்லாத்தூர் ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்நல்லாத்தூர் ஊராட்சி செயலராக கடம்பத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் (48) பணிபுரிந்து வந்தார்.

பாஸ்கர் நேற்று காலை ஊராட்சிஅலுவலகத்துக்குச் சென்று அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துஊராட்சி தலைவர் அரிபாபுவுக்கும், காவல் துறைக்கும் கிராமமக்கள் தெரிவித்தனர். மணவாளநகர் போலீஸார் பாஸ்கரின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாஸ்கர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து, எழுதியுள்ள கடிதத்தில் வட்டார வளர்ச்சிஅலுவலரை குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in