கரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் உதயநிதி பிரச்சாரம்

கரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் உதயநிதி பிரச்சாரம்

Published on

கரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும்(பிப்.7,8) ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சுற்றுப்பயணம் செய்கிறார்.

இன்று(பிப்.7)காலை அரவக் குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களிலும், மாலையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, தாந்தோணிமலை, ராயனூர், பஞ்சமாதேவி, வெங்கமேடு, வடிவேல்நகர் ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாளை (பிப்.8) காலை 9 மணிக்கு கரூர் பிரேம் மஹாலில் நடைபெறும் வாக்குச்சாவடிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பழையஜெயங்கொண்டம், காணியாளம் பட்டி, தரகம்பட்டி, வெள்ளியணை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின், அன்று மாலை 4 மணியளவில் ரெஸிடென்சி ஹோட்டலில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர், லாலாபேட்டை, குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in