சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட பாண்டியன் நகர் சஞ்சீவி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.ஆனால், இப்பகுதியில் போதுமான சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை.

இந்நிலையில், மத்திய மாவட்ட வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அனுப்பர் பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், "எங்கள் வீதியில் கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடைகழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் குழந்தைகள், வயதானவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. ஆகவே, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in