சேலம் சோனா கல்விக் குழுமத்தில் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப கட்டிடம் மற்றும்  நூலகம் திறப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சோனா கல்விக் குழுமத்தில் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப கட்டிடம் மற்றும் நூலகம் திறப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சோனா கல்விக் குழுமத்தில் புதிய தொழில்நுட்ப திறன் கட்டிடம் திறப்பு விழா

Published on

சேலம் சோனா கல்விக் குழுமத்தில் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப திறன் மிக்க கட்டிடம் மற்றும் நூலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா பேசும் போது, ‘மாணவர்க ளின் திறன்களை மேம்படுத்த நூலகம் ஒரு முக்கிய அம்சம். இதற்காக கல்லூரியில் டிஜிட்டல் நூலகம் மற்றும் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்தி கல்வி கற்றல் மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இப்புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு தற்போதுள்ள தொழில்நுட்ப சூழ்நிலைக்கு ஏற்ப பிரத்யேக வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள், அனைத்து நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஆராய்ச்சி அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது சிறப்புகுரியது. இதனைத் தொடர்ந்து பேசிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குழந்தைவேல், ‘ சிறந்த உள்கட்டமைப்பு, கல்வி, நூலகம், ஆய்வு போன்றவையில் சிறந்து விளங்கும் சோனா கல்வி குழுமம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற வாழ்த்துகள்,’ என்றார்.

விழாவில் கல்லூரி நிர்வாகத்தின் குடும்பத்தினர், கோகுலம் மருத்துவமனை தலைவர் டாக்டர் அர்த்தனாரி, லேனா சுப்ரமணியன், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், காதர்நவாஷ், கவிதா உள்பட பலர் பங்கேற்றனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in