

தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் வசித்து வருபவர் கோபிநாத்(68). இவரது மனைவி கஸ்தூரிபாய்(65). இவர்களின் மகன் கார்த்திக் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். கோபிநாத், கஸ்தூரிபாய் ஆகியோர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் நேற்று வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில், கஸ்தூரிபாய் உயிரிழந்தார். ஆனால், கயிறு அறுந்ததால் கோபிநாத் கீழே விழுந்தார். இதையடுத்து, பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்ட கோபிநாத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.