செங்கல்பட்டு விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில்தெலங்கானா ஆளுநர் பங்கேற்பு

செங்கல்பட்டு விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில்தெலங்கானா ஆளுநர் பங்கேற்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய அவர், பின்னர் மருத்துவமனையின் பயிற்சி செவிலியர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கை ஆட்சியர் ஜான் லூயிஸ், செங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், அதிமுக மாவட்டச் செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மற்றும் மருத்துவர்கள் அனிதா, ஹரிஹரன், தேன்மொழி, பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முத்துமாரியம்மன் ஆலயம்: இதேபோல் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரம் சிவன் தாங்கல் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in