காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் அண்ணா நினைவு தினம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் அண்ணா நினைவு தினம்
Updated on
1 min read

காஞ்சி மாவட்டத்தில் அண்ணாநினைவு இல்லத்தில் அண்ணாநினைவு தினத்தையொட்டி ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில்ஆட்சியர் மகேஸ்வரி, அதிமுகமாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு பங்கேற்றனர்.

செங்கை மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் உட்பட பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அண்ணாநினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மதிமுக ஒன்றியச் செயலர் லோகு தலைமையில் அக்கட்சியினரும், அமமுக மாவட்டச் செயலர் கோதண்டபாணி தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்தனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவேற்காடு கருமாரியம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in