

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி யில் நேற்று 2-வது நாளாக மறியலில்ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். இதன்படி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 68 பேரை கள் ளக்குறிச்சி போலீஸார் கைதுசெய்தனர்.
கடலூர்
விழுப்புரம்