மரத்தில் பைக் மோதி அண்ணன், தம்பி உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி அண்ணன், தம்பி உயிரிழப்பு
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் அருகேஉள்ள கண்டமங்கலம் கிராமத் தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அழகுராஜா (28). வெளி நாட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அழகுராஜா, அவரது இளைய சகோதரர் விஜய்(20), செட்டித்தாங்கல் கிரா மத்தை சேர்ந்த ராஜதுரை (20)ஆகிய மூவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண் டிருந்தனர். பூவிழுந்தநல்லூர் அருகே ரங்கநாதபுரத்தில் வளை வில் செல்லும் போது சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயத் துடன் மயங்கி விழுந்தனர்.

அவ்வழியாக சென்றவர் கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸில் காட்டுமன் னார்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அழகுராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் உயிரி ழந்து விட்டதாக தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை அளிக் கப்பட்ட நிலையில் விஜய் உயிரிழந்தார். ராஜதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in